இளைஞர்களை மயக்கி ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும் தம்பதியைப் பற்றி தெரியுமா? இளைஞர்களை மயக்கி பணம் பறிக்கும் தம்பதியை புளத்சிங்கள பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இளைஞனொருவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாவை ஏமாற்றிப் பெற முயற்சித்த வேளையிலேயே பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண் அழகானவராம். அவர் பஸ் தரிப்பிடங்களில் இளைஞர்களிடம் தனது தொலைபேசி இலக்கத்தை வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
பின்னர் அவர்களிடம் பழகி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் , தம்பதிகள் பணம் பறித்துள்ளனர். பலரிடமிருந்து குறித்த தம்பதியினர் பணம் பறித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் மதுகம நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்