சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் உதவியின் மூலமே அம்பாந்தோட்டையில் துறைமுகம் மற்றும் விமானநிலையம் ஆகியன அமைக்கப்பட்டன. இந்த அபிவிருத்தி திட்டங்களால் நாட்டுக்கு எவ்வித வருமானமும் இல்லாத காரணத்தால் சீனாவுக்கு கடனை திருப்பி வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே துறைமுகத்தையும் விமான நிலையத்தையும் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சீனாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்க தீர்மானித்துள்ளோம் என தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சீனாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உலக நகர தினத்தை முன்னிட்டு பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார். வீரகேசரி