எப்.முபாரக்-
உலக முதியோர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும்,மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதேச செயலகமும் இணைந்து முதியோர்களின் வீதி நாடகம் இன்று வியாழக்கிழமை (20)காலை 11.00மணியளவில் திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.
இதன் போது முதியோர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்ற புறக்கணிக்கப்படுகின்ற சந்தர்பங்கள் போன்றவற்றினை வீதி நாடகங்கள் மூலம் காண்பிக்கப்பட்டன. இதன் போது சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.