எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பேராறு ஜனதா மாவத்தைக்கு காபட் வீதீயாக்குவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(21) மாலை 4.30 மணியளவில் கந்தளாய் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியக் குழுவின் ஏற்பாட்டில் கந்தளாய் நஜாஹ் அரபிக் கல்லூரிக்கு முன்னால் நடைபெற்றது.
கந்தளாய் பேராறு ஜனதா மாவத்தை நீண்ட காலமாக புனரமைக்கப்படாது இருந்த நிலையிலே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிடம் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகரத்திட்டமிடல் அமைச்சின் 21இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் மூலம் ஒரு கிலோ மீற்றர் வீதிக்கான காபட் இடுவதற்கான பணிகளை வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்வும் ,விசேட அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -