சப்னி அஹமட்-
திருகோணமலை, கிண்ணிய வானல பிரதேசத்தில் வைத்தியராக கடமையாற்றிய வைத்தியர் ப்ரேம் குமார் என்பவரை உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் பதவிஸ்ரீபுர வைத்தியசாலைக்கு நியமிக்கும் படியும் பதவிஸ்ரீபுர வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ள வைத்தியர் சுதாகரனை நாளை (11) முதல் மீண்டும் புல்மோட்டை வைத்தியசாலைக்கு மீள அனுப்புவதாக சுகாதார அமைச்சர் ஏ.எல் நஸீர் தெரிவித்தார்.
அத்துடன், மேலதிகமாக இன்னுமொரு வைத்தியரை புல்மோட்டை வைத்தியசாவைக்கு இன்னும் சில மாதங்களில் நியமிப்பதாகவும் தெரிவித்தார் .
இக்கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் அன்வர்,ஜே.எம்.லாஹிர் வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு மற்றும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடனும், திட்டமிடல் பணிப்பளார் திருமதி வைத்தியர் எஸ். முனாஸ் ஆகியரும் கலந்துகொண்டனர்.