பாறுக் ஷிஹான்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் நீதிகோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(24) யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து குறித்த போராட்டத்தை அமைதியான முறையில் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு யாழ்ப்பாணம் - கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான விஜயகுமார் சுலக்ஸன் மற்றும்ந டராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த போராட்டத்தில யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்கள் கலந்து கொள்ளாத போதிலும் முஸ்லீம் மாணவர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.