கலை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலின் மனித நூற்களின் கருத்தாடல் நிகழ்வு..!

எம்.எம்.ஜபீர்-
லை கலாசாரம் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் கருத்தாடல் இலங்கை நூலக சங்கத்தின் தலைவர் கலாநிதி பிரதீபா விஜயதுங்கவின் வழிகாட்டலில் giz நிறுவனம் இலங்கை நூலக சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த மனித நூற்கள் எனும் கருத்தாடல் சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா இலக்கியமும் நல்லுறவும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.எம். பாசில் பிறருடைய கருத்துக்களுக்கு செவிமடுத்து அவர்களைப் பற்றிச் சொல்வதனால் சமூக நல்லிணக்கத்தை உருவாக்கலாம், ஓய்வுபெற்ற கல்வி பணிப்பாளர் யூ.எல்.அலியார் பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடிகளினூடாக சமாதானத்தைக் கட்டியெழுப்பலாம், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர் சகாதேவராஜா சமயங்களின் புரிந்துணர்வின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பலாம், டாக்டர் எம். காலித் (யூனானி வைத்தியர்) ஒவியம் வரைதல், கவிதை மூலம் மன அழுத்தத்தை குறைத்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், ஊடகவியலாளர் இர்பான் மௌலானா பாரம்பரிய பண்பாட்டு ஊடகங்கள் மூலமாக சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம், ஜோதிராஜா கருணேந்திரா சமூக நல்லிணக்கத்தில் சமுதாயக் கலைகள், கலைஞர் செசிலியா நாடகங்கள், பாடல்கள் மூலம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம், ஆகியோர்கள் மனித நூற்கள் எனும் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ.சலீம், இலங்கை நூலக சங்கத்தின் சார்பாக தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகர் எம். எம். றிபாயுடீன், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.பௌசர், giz நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் ஆர். சிவதர்சன், சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்தின் நூலககர் ஐ.எல்.எம்.ஹனீபா, நிகழ்ச்சி திட்டத்தின் இணைப்பாளரும் நூலகருமான ஏ.எல்.எம்.முஸ்தாக், வாசகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது (மனித நூற்கள்) வளவாளர்களுக்கு ஏற்பாட்டுக் குழுவினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -