ஏ.எம்.றிகாஸ்-
தேசிய உள்ளுராட்சி வாரத்தையொட்டி மட்டக்களப்பு-செங்கலடி பிரதேச சபையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட நடைபவணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று 31.10.2016 காலை நடைபெற்றன.
செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்களது பங்கேற்புடன் வீதி நாடகம் நடைபெற்றதையடுத்து நடைபவணி நடைபெற்றது.
எல்லை வீதிச் சந்தியிலிருந்து ஆரம்பமான நடைபவணி பிரதான வீதி வழியாக செங்கலடி சந்தை முன்றலில் முடிவுற்றது. அதையடுத்து விஷேட கூட்டம் நடைபெற்றது.
நடைபவணியில் கலந்துகொண்டோர் பொதுமக்களை விழிப்பூட்டும் பல்வேறு சுலோகங்களை ஏந்திச் சென்றனர். பிரதேச சபையின் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களும் நடைபவணியைப் பின்தொடர்ந்தன.
பிரதேச சபையின் செயலாளர் கே.பேரின்பராசா தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதேச செயலாளர் யு.உதசிறிதர் மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி இரா.சிறிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.