முள்ளிப்பொத்தானை சிராஜ் கனிஷ்ட பாடசாலைக்கான புதிய இடத்திற்கு மாற்றுவதற்காக சிராஜ் நகர் பொது மைதானத்திற்கு அருகாமையினுள்ளே திரு.ஜபருல்லாஹ் கான் என்பருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணித்துண்டு ஒன்றை குறித்த பாடசாலையின் அபிவிருத்தி சங்கம் தம்பலகாமம் முள்ளிபொத்தானை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கமைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் .எம் .அன்வர் குறித்த நபருக்கு சொந்தமான காணியினை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் 17.10.2016 ம் திகதி மாலை 07.30 மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து காணிக்கான முற்கொடுப்பனவு வழங்கி வைத்த போது
நிகழ்வின்போது பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் தம்பலகாமம் பிரதேசத்திற்கான ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் மத்திய கிளை உறுப்பினர்களை உட்பட கட்சிப் போராளிகள் பலரும் கலந்துகொண்டனர்
குறித்த பாடசாலை தற்பொழுது அமைந்திருக்கும் பகுதியானது மலைப் பகுதியில் அமைந்திருப்பதால் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.