இறக்காமம் மீடியாபோரத்தின் ஏற்பாட்டில் இறக்காம மண்ணுக்குப் பெருமை சேர்த்த கல்வியியலாளர்களைப் பாராட்டி, கெளரவிக்கும் விழா இறக்காமம் அஷ்றப் மத்திய கல்லூரி மைதானத்தில் மிக பிரமாண்டமாக இறக்காமம் மீடியாபோரத்தின் தலைவர் எஸ்.எல்.எம்.பிக்கீர் தலைமயில் நடைபொற்றது.
இன்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள்காங்கிரசின் தலைவரும்
வர்தக கைத்தொழில்துறை அமைச்சருமான றிசாட் பதியுதீன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் என இம்முறை பல்கலைக் கழகத்திட்க்கு தெரிவு செய்யப்பட்டவர்களையும் பாராட்டி கெளரவிக்கப்பட்டு நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் இந்நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஷர் முஸ்தபா கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.