கல்குடா மஜ்லிஸ் ஷூரா ஏற்பாட்டில் கல்குடாவிற்கான முதற்கட்ட குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு கடந்த வருடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் மூலம் அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதியொதுக்கீடுகளும் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கல்குடாவில் தலைமையும் உயர்பீட உறுப்பினருமான கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அனைத்து வேலைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு, முடிவுற்ற கல்குடாவிற்கான குடிநீர் விநியோகத்திட்டம் இன்று காலை 01.10.2016ம் திகதி உயர்பீட உறுப்பினருமான கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களின் பங்குபற்றுதலுடன் முதற்கட்டமாக ஆரம்பித்து திறந்து வைத்து குடி நீர் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மஜ்லிஸ் ஷுறா சபை தலைவர் உறுப்பினர்கள், முஸ்லிம் காங்கிரஸின் கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சிப்போராளிகள், ஆதவாளர்கள் அனைவரையும் கலந்து சிறப்பித்தனர்.