உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபியா சென்றுள்ள ஶ்ரீலங்கா ஹிறா பௌண்டேசன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு மக்கா உம்முல் குரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் நேற்று இரவு(30) விசேட விருந்து வழங்கி கௌரவித்தார்கள்.
மக்கா உம்முல் குரா பல்கலைக்கழக பேராசிரியர் தாஹா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பேராசிரியர் டாக்டர் அப்துர்ரஹ்மான் சுலமி, டாக்டர் இஸ்மாயில், டாக்டர் சுலைமான் உற்பட பல்கலைக்கழகத்தினுடைய பல பேராசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
முஹம்மத் ஹம்ஸா.