உலகவங்கி நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதியகிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் அவர்களினால் தலா 6.5 மில்லியன் ரூபா பெறுமதியில் இரத்தினபுரி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 18.10.2016 அமைச்சரின் வழிகாட்டலுக்கமைய இடம்பெற்றது.
தேல்ஸ்டன், பம்பேகம, றம்புகந்த, ஹப்புகஸ்தென்ன ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி, மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார், கமலதாசன் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.