எஸ்.என்.எஸ்.றிஸ்லி-
இன்று வடமாகாண சபை 64 வது கூட்டத்தொடரில் வடமாகாணசபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான ரிப்கான் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மன்னார் நகரசபை கடைத்தொகுதிக்கான பிரச்சினை முடிவுக்கு வந்தது.
இக்கடைக்கான நகரசபை நிர்ணயித்திருந்த 500000/= ரூபா கடைக்கான குத்தகைப்பணத்தினை உடனடியாக செலுத்தவேண்டி கடந்தமாதம் கடைஉரிமையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தது, இச்சம்பவத்தை உடனடியாக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு கடை உரிமையாளர்கள் கொண்டுவந்தனர். இதனால் சம்பவஇடத்திற்கு விரைந்த ரிப்கான் பதியுதீன் அவர்கள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்கள்.
இதனடிப்படையில் 64 வது கூட்டத்தொடரில் வடமாகாண சபை செயலாளர் கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டுசென்று இப்பிரச்சினைக்கான தீர்வை ரிப்கான் பதியுதீன் பெற்றுக்கொடுத்தார், டெனீஸ்வரனும் இத்தீர்வை பெற்றுக்கொடுப்பதில் துணைநின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.