பைஷல் இஸ்மாயில், சப்னி அஹமட்-
திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலை மற்றும் சிரைச்சாலை நலன்புரிச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் குடும்பத்தினருக்கு நேசக்கரம் நீட்டும் நிகழ்வு (04) கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பணத்தொகையும் வழங்கி கெளரவித்தார்.
இதன் போது முதலமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ், சுகாதார அமைச்சின் செயலாளர் கருணாகரன், பேரவை செயலாளர் செரிப் உட்பட கிழக்கு மாகாண சபை அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.