ஏறாவூர் நிருபர். ஏ.எம்.றிகாஸ்-
20.10.2016 வாழைச்சேனை-ஆயிஷா பாலிகா மகா வித்தியாலயத்தில் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நூலகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஓர் அங்கமாக அதிபர் எம்ரீ.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வியலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்எஸ்கே. றகுமான் மற்றும் சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ.நாஸர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து -கொண்டுள்ளதைப் படத்தில் காணலாம்.
இதன்போது பாடசாலை நூலகத்திலுள்ள புத்தகங்களுடன் பிரதேச எழுத்தாளர்களது படைப்புக்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் முதலான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.