நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வன் அதீப் அஹமட் முகம்மட் சபீக் 181 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் இரண்டாமிடத்தையும், அம்பாறை மாவட்டத்தில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளார்.
தனது பெறுபேறு தொடர்பில் எமக்கு கருத்து தெரிவித்த அதீப் அஹமட் ,
தனது இந்த பெறுபேற்றுக்கு காரணமாகவிருந்த பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் என்னுடன் பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த சக நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் . அத்துடன் குறிப்பாக என்னுடைய இந்த புள்ளிகளை பெற்றுக் கொள்ள இரவு பகலாக எனக்கு ஊக்கமளித்த எனது தந்தை முஹம்மட் சபீக் அவர்களுக்கும் எனது தாய் பர்ஸானா சரிப்டீன் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் .
எதிர்காலத்தில் தான் ஒரு வைத்தியராக வர வேண்டும் என்பது தனது இலட்சியம் எனவும் அதீப் அஹ்மட் தெரிவித்தார் , அவருடைய இலட்சியம் நிறைவேற எமது இணையம் சார்பாக நாங்களும் அதீப் அவர்களை வாழ்த்துகின்றோம்.
மீரா அலிரஜாயி.