அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆள் கடத்தல் வழக்கில் பிணை சந்தேக நபர் சார்பில் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்..!

திருக்கோவில் பிரதேசத்தில் தம்பிலுவில் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஆயுதக்குழுவின் உறுப்பினருமான நவரட்ணம் ஞானராஜ் என்பவரை கடந்த பயங்கரவாத யுத்த சூழ்நிலை இப்பகுதியில் நிலவிய காலப்பகுதியில் அடாத்தாக கடத்திச் சென்று பின்பு காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த சில சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த வழக்கில் தம்பிலுவிலைச் சேர்ந்த கசேனமூர்த்தி கமலநாதன் என்றழைக்கப்படும் இரண்டாவது சந்தேக நபரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாடு மூலம் தொடரப்பட்ட வழக்கு அம்பாரை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் இரண்டாவது சந்தேச நபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களின் பிணை மனுவிற்கான விண்ணப்பத்தில் குறிப்பாக குறிப்பிட்டதாவது, 

மேற்படி சந்தேக நபர் இக்குற்றஞ்செய்யப்பட்ட காலப்பகுதியில் இந்நாட்டில் இருக்கவில்லை என்றும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு வசதிக்காக சென்றிருந்தார் என்பதற்கான ஆதாரமுண்டு எனவும்; அத்துடன் சந்தேச நபர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் கூட இச்சந்தேக நபர் அடையாளம் காணப்படவில்லை என்பதனாலும் இவைகளை பொலிஸாரும் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதனை நீதிமன்றின் கவனத்திற்கு விசேடமாக கொண்டுவர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

சட்டத்தரணி கபூர் அவர்களின் நியாயபூர்வமான பிணை விண்ணப்பத்தை நன்கு பரிசீலனை செய்து அதனை ஏற்றுக் கொண்ட அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய நளினி கந்தசாமி அவர்கள் குறித்த இரண்டாவது சந்தேகநபரை மட்டும் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல உத்தரவிட்டு ஏனைய எல்லாச் சந்தேக நபர்களையும் மீண்டும் மறுதவணை வரை விளக்கமறியலில் வைக்கும்படியும் கட்டளை பிறப்பித்தார். 

வழக்கிலக்கம் : B/8862/PC/16
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -