முஸ்லிம்களுக்கு விருந்து வைத்த மஹிந்த...!!

பேருவளை பிரதேசத்தை சேர்ந்த அறுபது பேர் கொண்ட குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை அவரது ஹம்பாந்தோட்டை கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளனர். இதன்போது அவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி விருந்து அளித்துள்ளார்.

இந்த விருந்தில் பேருவளை நகர முன்னாள் தலைவர் மில்பர் கபூர், பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினர் ரபாய்தீன், பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் ரிபாஸ் நபுஹான், சீனன்கோட்டை வர்த்தகர் ஆசாப் அஹ்மட் உற்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முஸ்லீம் முற்போக்கு முன்னணி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள அதேவேளை முஸ்லீம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளுக்கு பின்னணியில் நாம் இருந்திருந்தால் அதற்கு எதிராக ஏன் நல்லாட்சி அரசுக்கு விசாரனை நடத்த முடியாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற எல்லாவற்றையும் விசாரனை செய்யும் நல்லாட்சி அரசு அலுத்கமை பேருவளை வன்முறைகளையும் விசாரனை செய்ய வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் அப்போது புற்றுக்குள் இருக்கும் நாகம் வெளியே வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நான் விளக்கம் கொடுத்து முஸ்லீம்கள் நம்பாவிட்டாலும் காலம் இதற்கு வெகுவிரைவில் பதில் செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது பாத்தியா மாவத்தை பள்ளிவாயல் தடை, தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரம் , மீண்டும் தலைதூகியுள்ள இனவாத செய்ற்பாடுகள் தொடர்பில் அங்கு இருந்த முஸ்லிம்களால் முன்னாள் ஜனாதிபதிக்கு எடுத்துக்கூறப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -