தெஹிவளை மீலாத் வித்தியாலய பரிசலிப்பு நிகழ்வு..!

அஷ்ரப் ஏ. சமத்-
லங்கையின் முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் 60 வருடங்களுக்கு மேலாக அதுவும் கொழும்பு மாவட்டத்தில் ஒரு கட்டடத்துடன் 20 பேர்ச் காணியில் பாடசாலை ஒன்று இயங்குவதென்றால் அது தெஹிவளை முவா் வீதியில் உள்ள மீலாத் முஸ்லீம் வித்தியாலயமாகும். இங்கு 118 முஸ்லீம் மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனா். 25க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் உள்ளனா். சகலருக்கும் 2 மலசல கூடம் மட்டுமே உள்ளது. பாணந்துறை தொட்டு கொழும்பு காலிமுகத்திடல் வரையும் முஸ்லீம் ஆண் பெண் பாடசாலை ஒன்று உள்ளது என்றால் தெஹிவளை பாலத்திற்கு கீழ் இயங்கும் பாடசாலையாகும்.

இப்பாடசாலையிற்கு கடந்த 1 வருடமாக புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள 1ஆம தர அதிபா் எம்.எஸ்.எம் சுஹா் வீழ்ந்து கிடந்த இந்தக் கல்லுாரியை கட்டி எழுப்புவதில் மிகவும் கரிசனை உள்ளாா். இவருடன் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றாா்கள் தெஹிவளை பள்ளிவாசல் வர்த்தக சமுகம் கைகொடுத்து வருவதாக தெரிவித்தாா். நான் இந்தப் பாடசாலையை பொறுப்பேற்ற அன்று எனது நியமனக் கடிதத்தினை பயில் இடுவதற்கு பயில் கவா் ஒன்று இக் கல்லுாாி அலுவலகத்தில் இருக்க வில்லை. வங்கி கணக்கில் 1 ருபா 35 சதம் மட்டுமே இருந்தது. உடன் செயல்பட்டு இக் கல்லுாாியின் ஆசிரியா் ஒருவரே முதலில் தமது சொந்தப் பணத்தில் 15ஆயிரம் ருபாவை நன்கொடை அளித்தாா். என கல்லுாாி அதிபா் அங்கு தெரிவித்தாா்.

இன்று(27)ஆம் திகதி இப்பாடாசலையில் பரிசலிப்பு விழா மாணவா்களது கலை நிகழ்ச்சிகள், ஆசிரியா் கௌரவிப்பு 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் சித்தியைடைந்த மாணவா்கள் கௌரவப்பு.மற்றும் 10 ஆம் ஆண்டு மாணவா்கள் மாணவத் தலைவா்கள் பதிவியேற்பு என பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. 
இவ் வைபத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவா் றிஸ்வி முப்தி, முஸ்லீம் கவுன்சில் மற்றும் முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா் என்.எம். அமீன், நொலேஜ் பொக்ஸ் ஊடக நிறுவனத்தின் பணிப்பாளா் அஸ்கா், மேல் மாகண கல்வித்திணைக்களத்தின் பணிப்பாளா் திருமதி வசீர்தீன் மற்றும் வலயக் கல்வி அலுவலா் காதா் இங்கு கலந்து கொண்டு இக் கல்லுாாி பற்றி உரயாற்றினாா்கள். 

இக் கல்லுாாிக்கு அருகாமையில் உள்ள காணியொன்றை விற்பனைக்கு உண்டு. அதனை இப்பாடசாலையின் ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் நடத்துவதற்கும், இப்பிரதேச தனவந்தா்கள். நலன் விரும்பிகள் உதவுமாறு கல்லுாாி அதிபா் எம்.எஸ்.எம் சுஹா் அங்கு வேண்டிக் கொண்டாா். 

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவா் றிஸ்வி முப்தி - 
இப் பாடசாலையில் உள்ள பழைய கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிமொன்றை நிர்மாணிப்பதற்கு மெலிபன் இல்யாஸ் ஹாஜியாா் முன்வந்துள்ளதாகவும் இக் கட்டிட வரைபடம் தெஹி வளை - கல்கிசை மாநகர சபையில் இருந்து அனுமதி பெற்றதும் தற்காலிகமாக ஒரு வீட்டுக்கு மாற்றப்பட்டு இக்கல்லுாாி நிர்மாணிக்க உள்ளதாகவும் தெரிவித்தாா். இப்பாடசாலை பாணந்துறை தொட்டு கொள்ளுப்பிட்டி வரையிலான முஸ்லீம் சமுகத்திற்கு தேவையானதொரு பாடசாலையாகும். இதனை அபிவிருத்தி செய்வது எமது தலையாய கடமையாகும். கொழும்பில் 21 பாடசாலைகள் உள்ளன. 

அவைகள் அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். ஒவ்வொரு பாடசாலையிலும் உலகக் கல்வியுடன் இஸ்லாமியக் கல்வியும் கட்டாயமாகும். எமது அமைப்பில் தற்போது கல்விக்கென தனியான பிரிவு இயங்குகின்றது. பாடசாலைகளில் மாா்க்க கல்வி புகட்டுவதற்கு எமது அமைப்பு 17 மௌலவி மாா்களை நியமித்து அவா்களுக்கு சம்பளம் வழங்கும் திட்டத்தினையும் சில பாடசாலைகளில் அமுல்படுத்துகின்றது. இலங்க அரசாங்கத்தில் 1939 ஆம் ஆண்டில் இருந்து மொளலவி ஆசிரியா்கள் நியமனம் வழங்க்பட்டது. 

ஆனால் 1994 கல்வியமைச்சினால் இதுவரை மொலவி ஆசிரியா்கள் நியமனம் மறுக்கப்பட்டு வருகின்றது. இதனை எமது முஸ்லீம் அரசியல்வாதிகள் பெற்றுக் கொள்ள மீள முயற்சித்தல் ,வேண்டும். அரசியல் வாதிகளுக்கு ஆண்மீகம் இருப்பது கட்டாயமாகும். அப்போது தான் தான் சாா்ந்த சமுதாய உணா்வும் வரும், இந்தப் பாடசாலையில் கூட 6 தமிழ் ஆசிரியா்கள் கடமையாற்றுகின்றாா்கள். அவா்கள் மத வேறுபாடு இன்றி தமிழ் மொழியை பேசுபவா்களாக நமது பிள்ளைகளுக்கு தமது உண்னத சேவைகளை செய்து வருகின்றனா். 

பாடசாலைகள் ஆண்கள், வேறு பெண்கள் வேறாக இருந்த பாடசாலைகள் தான் அங்கு கல்வி முன்னேறி பரீட்சைகளில் சித்தியடைவாா்கள். கலவன் பாடசாலையாக இருந்தால் அங்கு கல்வி முன்னேற்றம் அற்றதாகவே காணப்படும். இலங்கையில் முஸ்லீம்களுக்கென 900 பாடசாலைகள் உள்ளன. அதில் 50 பாடசாலைகள் மட்டுமே தனியான ஆண் பெண் பாடசாலைகள் உள்ளன. அந்தப் பாடசாலைகளின் கல்விப் பெறுபேறுகள் சிறந்து விளங்குகின்றன. தெஹிவளையில் இவ்வாறனதொரு பாடசாலை உள்ளதா ? என தெஹிவளை வாழ்பவா்களுக்கே தெரியாது. 

நாமக்கு பள்ளிவாசல்களும் பாடசாலைகளும் இரண்டு கண்களாக நாம் பாடசாலைகளையும் முன்னேற்ற வேண்டும். கொழும்பு மவாட்டத்தில் மட்டும் முடுக்கு வீடுகளில் வாழ்ந்து வரும் முஸ்லீம் மாணவா்கள் 4000 பேர காலைச்சாப்பாடு சாப்பிடாமல் பாடசாலை வருவதை அவதாணிக்க முடிந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்பபட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் முஸ்லீம் மாணவா்கள் அரச பாசடாலைகளில் கல்வி கற்கின்றனா். எனவும் றிஸ்வி முப்தி அங்கு தெரிவித்தாா்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -