காரைதீவு நிருபர் சகா
கிழக்குமாகாணத்திற்கான கலைகளின் திருவிழா என்ற சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா இன்று27ஆம் காரைதீவில் ஆரம்பமாகின்றது. அங்குரார்ப்பணநிகழ்வு காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் காலை 8.30மணிமுதல் 10.30மணிவரை இடம்பெறும். அமைச்சர் மனோகணேசன் இன்று பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பிக்கின்றார்.
பின்பு விபுலானந்தமத்தியக்லலூரியில் கலாசாரநிகழ்வும் மாலைநிகழ்வுகளாக சண்முகா மகா வித்தியாலயத்தில் குறுந்திரைப்படமும் நல்லதங்காள் வடமோடி கூத்தும் இடம்பெறவுள்ளது. நாளை 28ஆம் திகதி இதேபோன்று கலாசார நிகழ்வுகளும் எட்டாம்போர் வடமோடி கூத்தும் இடம்பெறும். நாளை சனிக்கிழமை வேடர்கள் போத்துக்கீசர்களின் நிகழ்வுகளளும் நிறைவு நிகழ்வும் இடம்பெறும்.
இதற்காக காரைதீவிலுள்ள விபுலானந்த மத்தியகல்லாரி சண்மகா மகாவித்தியாலயம் இ.கி.மி.பெண்கள் பாடசாலை ஆகிய 3பாடசாலைகள் இன்றுமுதல் 3தினங்களுக்கு மூடப்படுகின்றன. பதில் பாடசாலைகள் பின்னர் நடாத்தப்படவிருக்கின்றன என பிரதேசசெயலாளர் சுதர்சினி காந்த தெரிவித்தார்.
நோக்கம்
கலைபண்பாட்டினூடாகநல்லிணக்கத்தைபேசுதல் என்னும் தொனிப்பொருளில் சமூகநல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழாவானது கிழக்கு மாகாண பல்லின சமூகமக்களின் பாரம்பரிய அடையாள ஆற்றுகைகள் கிழக்கு மாகாணத்தை பிரதிபலிப்பதாகவும் கிழக்கு மாகாணத்திலுள்ள குறிப்பிட்ட சமூகத்தின் அதிகம் பேசப்படாத கவனத்திற்கொள்ளப்படாத எண்ணிக்கையில் குறைந்த சமூகத்தவரின் ஆற்றுகைகள் கலைகள்இ கலைஞர்களைக் கொண்டுவருதல்.
கலைகளை தொடர் செயற்பாடாகவும் தொடர் செயல்வாதமாகவும் முன்னெடுத்துவரும் வாழ்வியலுக்கான கலைசெயற்பாட்டாளர்கள் செயல்வாதங்கள். இனம் இவர்க்கம் பிரதேசம்சமயம்பால்நிலைசாதிகுடிஏற்றத்தாழ்வுகள் குறித்துகவனம் செலுத்திசமத்துவத்தைகொண்டுவருவதற்கானஆற்றுகைகள். கற்றல் மற்றும் ஆய்வுச் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டிய பொருத்தமான கலை ஆற்றுகைச் செயற்பாடுகள் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக மூன்றுநாட்கள் காரைதீவில் நடைபெறவுள்ளது.
தேசிய ஒற்றுமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் இஐரோப்பிய ஒன்றியம் ஜீஐஇசட் மற்றும் கெயார் ஆகியவற்றுடன் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை முன்னின்று நடாத்தும் பணிப்பாளர் ஜெய்சங்கர் விடுத்த அறிக்கைவருமாறு
வித்தியாசங்களைக் கொண்டாடும் வேறுபாடுகளை விளங்கிக் கொள்ளும் சமூகங்கள் வளர்க!
-கலாநிதி சி. ஜெயசங்கர்-
மனிதர்கள் கூட்டாகவும் தனியன்களாகவும் தங்களுக்குள் புளங்கும்பொழுதுகளிலேயே புரிதல்களும் உறவுகளும் ஏற்படுகின்றன.
ஒவ்வொரு சமூகக் குழுக்களும் தங்கள் தங்களுக்கான சமூகப் பண்பாட்டு வெளிகளை உருவாக்கிக் கொள்கின்றன. இவை சாதக, பாதகமான அம்சங்களைக் கொண்டவையாக இருப்பதும் இயல்பு. இத்தகைய நிலைமைகள் பற்றிய உரையாடல்களும் மாற்றங்களுக்கான முனைவுகளும் கொண்டவையாக மேற்படி சமூகங்கள் இயக்கம் கொண்டிருப்பதும் யதார்த்தம்.

மாற்றங்களுக்கான உரையாடல்களும் முனைவுகளும் சமூகங்களின் அக-புறத் தூண்டிகளால் ஏற்படுத்தப்படுகின்றன.சமூகங்கள் தங்களைக் கட்டிக்கொள்வதும் கட்டவிழ்த்துக் கொள்வதும் வரலாறாகவும் நடைமுறையாகவும் இருந்து வருகின்றது.ஆயினும் அதிகார நோக்கிற்கான ஆதிக்க முனைப்புகள் சமூகங்களின் இயங்கியலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைக் குறியாகக் கொண்டு இயங்கி வருவதும் வரலாறும் நடைமுறையுமாகும்.இந்த வகையில் காலனியம் திணித்துவிட்ட நவீனமயமாக்கம் அதற்கு முற்பட்ட பல விடயங்களை நூதனசாலை அல்லது தொல்பொருட் காட்சிச்சாலைக்கு உரியனவாகவும், அறிவு பூர்வமற்றவையாகவும் கட்டமைத்து வைத்திருக்கிறது. இதில் நவீன கல்வியின் பங்கு மிக முக்கியமானது.
சமூகப் பண்பாட்டு வெளிகளில் நிகழ்த்தப்பட்டு வந்த சமூகமயப்பட்ட பல்வேறு விழாக்கள், சடங்குகள் பிற்போக்கானவை, நாகரிகமற்றவையாகச் சுட்டப்பட்டு அற்றுப்போகச் செய்யும் கைங்கரியங்கள் நிகழ்த்தப்பட்டும், நிகழ்ந்தும் வருகின்றன.இன்னொரு தளத்தில், கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் அடைக்கப்பட்ட மண்டபங்களுக்குள் அனுமதி பெற்றே நிகழ்த்தும் வகையிலான முறைமைகள் நவீனமானதென அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமான வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன.
நவீனமயச் சூழல் இவ்வாறானதாக அமைய, உலகமயமாக்கல் சூழல் மேலும் பாதகமான விளைவுகளைக் கொண்டு வருவதாக இருக்கின்றது. ஆயினும் முன்னைய காலத்தைப் போலவே கல்வியும் வெகுசன ஊடகமும் இந்நிலைமைகளைக் கொண்டாடி வரவேற்பதே யதார்த்தமாக இருக்கிறது.
மேற்படி நிலைமைகளுக்கு உகந்த வகையில் சாய்க்கப்படுபவர்களாகவும், மேய்க்கப்படுபவர்களாகவும் மக்கள் கையாளப்படுகிறார்கள்.
இந்த வகையில், மக்கள் மத்தியில் இன்னமும் புளக்கத்தில் இருந்து வருகின்ற சமூகம் சார்ந்த விழாக்களைக் குடுவைக்குள் அடைக்கும் நிகழ்வுகள் நிதி வழங்கல்கள+டாக நிகழ்ந்தேறி வருகின்றன. அறிந்தும் அறியாமலும் இவற்றில் பங்கெடுப்பதும், முன்னெடுப்பதும் நிகழ்ந்தும் வருகின்றன.
இவற்றிற்குச் சமாந்தரமாக மக்கள் மத்தியில் சமூகமயப்பட்டு அவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டு வரும் விழாக்களின் முக்கியத்துவம் உணரப்பட்டும் அவற்றில் கேள்விக்குட்படுத்தப்பட்டு மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டியவை (உதாரணம்: பால், சாதி, வர்க்கம்) பற்றிய உரையாடல்களும் செயற்பாடுகளும் வலுவான வகையில் நிதிவழங்கல்கள் இன்றி சமூகப் பங்களிப்புகளுடன் நிகழ்ந்தேறி வருகின்றன.
சமூகமயப்பட்ட விழாக்களில் சமூகம் பங்குபற்றல், சமூகப் பங்களிப்புகளுடன் நிகழ்ந்தேறி வருவது வரலாறாகவும் இயல்பாகவும் இருந்து வருகின்றது. இந்த ஆக்கபூர்வமான இயல்புநிலையை வலுப்படுத்துவதே மிகப் பொருத்தமானதாகும். ஏனெனில் மேற்படி நடைமுறை சமூகங்களின் சுயசார்பு, நிலைத்து நிற்கும் தன்மை என்பவற்றுடன் தொடர்புபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய புரிதல்களுடன் சமூகங்கள் தங்களுக்குள்ளும் தங்களுக்கிடையிலும் இணைவுகளை வலுப்படுத்தவும் ஏற்படுத்தவுமான கலைக் களங்களாக விழாக்கள் என்ற எண்ணக்கரு புதுமுகங் கொண்டு செயற்பாடுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.விழாக்களுக்கான நிகழ்ச்சித் தெரிவுகளாக அன்றி தொடர் செயற்பாடுகள், உரையாடல்கள் ஊடாகக் கலைப்பண்பாட்டு அம்சங்கள் அணுகப்பட்டு அவற்றுக்கான இயல்பான வெளிகளில் பல்வேறுபட்ட சமூகங்களது கலைப் பண்பாட்டு அம்சங்கள் ஆற்றுகைக்கு கொண்டு வருவது மேற்படி விழாக்களின் நோக்கமாகும்.
நவீன கல்வியறிவு மற்றும் சினிமா, தொலைக்காட்சி உட்பட தொடர்பூடகங்கள் கட்டமைந்திருக்கும் காட்சிக் கவர்ச்சிப் பண்பாடுகள், மத ஆதிக்கங்கள் கட்டமைத்திருக்கும் கருத்தாக்க, சிந்தனைத் தடைகளை நீக்கி சமூகங்களின் பொறுப்பிலும் பங்களிப்பிலும் படைப்பாற்றலிலும் சமூகக் கொண்டாட்டங்களாக நிகழ்ந்தேறிவரும் கலைப் பண்பாட்டு விழாக்களின் சமகாலத் தேவையும் பயன்பாடும் பற்றிய புரிதல்களுக்கும் முன்னெடுப்புகளுக்குமான சமூகங்களின் கலைக் கழங்களாக மேற்படி விழாக்கள் உருப்பெற்று வருகின்றன.
காட்சிப்படுத்தல்களுக்கும் வணிகப்படுத்தல்களுக்குமான கைங்கரியங்களாக இவை அமைக்கப்படுவது சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்குமான திசைப்படுத்தல்களாகவே இருக்க முடியும்.தங்கள் தங்கள் சமூகங்களின் இயல்பான முன்னெடுப்புகளுக்கும் அவை கடந்து பொது வெளிகளில் பல்வேறுபட்ட சமூகங்களது கலைப் பண்பாட்டு அம்சங்களைப் பார்க்கவும் பகிரவுமான வெளிகளாகவும்;;; மேற்படி ஆற்றுகைச் சமூகங்களை முதன்மைப்படுத்திய வெளிகளாகவும் அமைவதே இக்கலை விழாக்களின் நோக்கமாகும்.
ஏனெனில் தாராளமயப் பொருளாதாரம் கோரிநிற்கும் படைப்பாற்றல் திறன் குன்றியதும் நுகர்வுத் திறன் பொங்கியதும்;;;;;;; சமுதாயப் பண்பகன்று தனிமனித வேட்கை கொண்டதும், போட்டிக் கல்வியாலும் இலத்திரனியல் உபகரணங்களாலும் கட்டுண்டதுமான தனிமனிதப் பிண்டமாக்கலிலிருந்து நீக்கம் பெறும் உலகங்கள் செய்யும் உலகமயப்பட்ட சமூகங்களின் இயக்கங்களின் அம்சமாகவே கலைப் பண்பாட்டுத் திருவிழாக்கள் கருத்தாக்கம் பெற்றும் நிகழ்ந்தும் வருகின்றன.
ஆதிக்க நோக்கத்திற்கான தற்காலக் கோரமுகமான பன்னாட்டு நிறுவனங்களது நலன்களிற்கான தாராளமயப் பொருளாதார வாதம்; உலகம் முழுவதும் இன, மத, மொழி எனப் பல்வகைப்பட்ட வகையிலும் பிரிவினைகளை முரண்பாடுகளை மூளாத் தீயாக்கி அடிப்படை வாதங்களை விளைவித்து மரண வணிகம் நிகழ்த்தி வருகின்றன.
ஆதிக்க நோக்கிலான போர்களிற்காக ஆயதங்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலைமை வன்கூர்மை பெற்று போர்த் தளபாட விற்பனைக்காக யுத்தங்களை உருவாக்குவது இதன் புதுமுகமாக இருக்கிறது. அயலவர்கள் சத்திராதிகளாகவும் எங்கோ இருப்பவர்கள் துயர் களைவோராகவும் நீதி வழங்குவோராகவும் கல்வி மற்றும் வெகுசன ஊடகங்களின் வழி மனிதர்களது சிந்தனைப்புலம் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. போரும் புலப்பெயர்வும் சமூக வலைப் பின்னல்களைப் பிய்த்தெறிந்து சொந்த இடங்களிலும் பிற இடங்களிலும் முகந்;தெரியாத மனிதர்களுடன் முகமற்ற மனிதர்களாக வாழ்வது நிர்ப்பந்தப்பட்டிருக்கிறது.
அபிவிருத்தியினதும் வளர்ச்சியினதும் பெயரில் தொடர்மாடிக் குடியிருப்புகளில் தனித்த தீவுகளாக பெருவணிக தயாரிப்புப் பண்டங்களின் உயிரியாகக் குறுக்கப்பட்டு வருகின்றன மனித சமூகங்கள். இத்தகைய குடூரமான நிலைமையே குதூகலமானதென நம்பவைக்கப்பட்டு வாழவைக்கப்பட்டிருக்கின்ற நிலைமைகளில் மனித சமூகங்களின் சமூகப் பண்பாட்டு வெளிகளை அந்த வெளிகளின் நிகழ்ச்சிகளை, விழாக்களை வலுப்படுத்தும், ஆதிக்கங்கள் நீங்கி மீளுருவாக்கும் கலைப் பண்பாட்டு நிகழ்ச்சியாகவே கலைத் திருவிழாக்கள் வடிவம் பெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் நட்சத்திரங்கள் போல் மின்னி மிளிர்கின்ற சமூகமயப்பட்ட பண்பாட்டு விழாக்களின் அம்சமாகவே கலைத் திருவிழாவும் மிளிர்வு பெறுகின்றது.