பாறுக் ஷிஹான்-
ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் இன்று(19) மாபெரும் கவனயீர்ப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு கட்டமாக குறித்த போராட்டம் இடம்பெற்றது.
யாழ்.ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற்ற இப் போராட்டத்தின்போது, ஊடக சுதந்திரம் வலியுறுத்தப்பட்டதோடு, பொலிஸ் அடக்குமுறைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்றும், காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.