சங்கைக்குரிய மர்ஹூம் ஷைஹுல் பலாஹ் அப்துல்லாஹ் ரஹ்மானி அவர்களின் ஞாபகார்த்த நிகழ்வு..



ஜுனைட்.எம்.பஹ்த், எப்.எம்.மஜீத்-
12.10.2016 புதன்கிழமை அன்று மரணித்த காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபு கலாசாலை அதிபரும் , காத்தான்குடி மக்களின் மதிப்புக்குறிய சங்கைக்குரிய " ஷைஹுல் பலாஹ் " அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்) அவர்களது ஞாபகார்த்த நிகழ்வு 15.10.2016 இன்று மஹ்ரிப் தொழுகையினை தொடர்ந்து காத்தான்குடி மத்ரஸதுல் பலாஹ் அரபுக் கலாசாலையில் இடம்பெற்றது.

காத்தான்குடி மக்களுக்காக தனது வாழ்நாளை அர்பனித்து சமய,சமூக விடயங்களில் சிறந்த முறையில் தலைமை தாங்கி முழு இலங்கை வாழ் மக்களின் மனதில் நீங்க நினைவு கூறப்படும் ஒரு சிறந்த மனிதர் சங்கைக்குரிய "ஷைஹுல் பலாஹ்" அப்துல்லாஹ் றஹ்மானி (பெரிய ஹஸ்ரத்) அவர்கள்.

மஜ்லிஸ் பலாஹீன்கள் தலைவர் அஷ்ஷேய்ஹ் ஏ.எம்.எம்.அலியார் ரியாதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் மூத்த உலமாக்கள், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள், ஊர் தலைமைகள், மார்க்க அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள், மத்ரஸா மாணவர்கள், காத்தான்குடி மற்றும் வெளியூர் பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மூத்த உலமாக்கல் மர்ஹூம் சங்கைக்குரிய " ஷைஹுல் பலாஹ் " அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களது வாழ்க்கை வரலாறு, சேவை, நடத்தைகள் போன்றவற்றை கன்னீரோடு பகிர்ந்து கொண்டனர்.. தனது தந்தையை பற்றி மர்ஹூம் சங்கைக்குரிய "ஷைஹுல் பலாஹ்" அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களது மூத்த மகன் வாழைச்சேனை குல்லியதுன் நஹ்ஜதில் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்ஹ் றஹ்மத்துல்லாஹ் (பலாஹி) பேசும் போது அரங்கமே கன்னீரில் மிதந்தது..

மர்ஹூம் சங்கைக்குரிய " ஷைஹுல் பலாஹ் " அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களது வாழ்க்கை வரலாற்றை பேசுவதோடு நிறுத்தி விடாமல் நமது வாழ்விலும் கொண்டு வர வேண்டும் என இங்கு உரையாற்றிச்சென்ற மூத்த உலமாக்கள் அனித்தரமாக கேட்டுக்கொண்டார்கள்..

மர்ஹூம் சங்கைக்குரிய " ஷைஹுல் பலாஹ் " அப்துல்லாஹ் றஹ்மானி பெரிய ஹசரத் அவர்களை அல்லாஹ் பொறுந்திக்கொண்டு மேலான ஜன்னதுல் பிர்தளஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக!



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -