எப்.முபாரக்-
திருகோணமலை-கோட்டை விகாரையின் விகாராதிபதி தாக்குதலுக்குள்ளான நிலையில் நேற்றிரவு (09) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளானவர் தம்ம லங்கார ஹிமி (75வயது) எனவும் தெரியவருகின்றது.
இரானுவ வீரரொருவர் தன்னை தாக்கியதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற் கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குள்ளான விகாராதிபதி தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.