மண்ணுக்கும்,ஸாஹிறா தாய்க்கும் பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டுகின்றேன் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

ஹாசிப் யாஸீன்-
ல்முனை ஸாஹிறா கல்லூரி மாணவர்கள் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலானபோட்டியின் அஞ்சல் ஓட்ட போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்று எமது மண்ணுக்கும்,ஸாஹிறா தாய்க்கும் பெருமை சேர்த்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதோடு பதக்கம் வென்றமாணவர்களை பாராட்டுகின்றேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 10 வருடங்களின் பின்னர் எமது மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் 21 வயதுக்குஉட்பட்ட அஞ்சல் ஓட்ட போட்டியில் சாதனைபடைத்து எம்மை கௌரவப்படுத்தியுள்ளனர்.

இவ்வாண்டு நடைபெற்று முடிந்த மாவட்ட, மாகாண, தேசிய மட்ட விளையாட்டுபோட்டிகளில் ஸாஹிறா மாணவாகள் பிரகாசித்தன் மூலம் ஸாஹிறாக் கல்லூரி தேசியரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளமையையிட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்மற்றும் கல்லூயின் பழைய மாணவன் என்ற ரீதியில் பெருமையடைகின்றேன்.

சாதனை படைத்த மாணவர்களுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கிய விளையாட்டுஆசிரியர்கள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் அனைவரையும்பாராட்டுகின்றேன்.

எமது பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளைதேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் பிராந்தியத்திலுள்ளவிளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -