எம்.வை.அமீர்-
சில ஊடகங்களில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் ஸ்தாபகர் முகைதீன் பாவா ஓய்வு பெறப்போவதாக வெளிவந்த செய்தி தொடர்பில் முகைதீன் பாவாவிடம் வினவியபோது: குறித்த செய்தியில் உண்மையெதுவும் இல்லையென்றும் பிழையான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி அஹமட் புர்க்கான் ஊடகங்களை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் ஓய்வு பெறுவது தொடர்பான எவ்வித தீர்மானத்தையும் தான் எடுக்கவில்லையென்றும் கட்சியின் செயற்பாடுகளை இன்னும் விரிவுபடுத்தும் நோக்கில் பிரதித் தலைவராக சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
NDPHR பிராந்தியத்தை உயர்மட்டத்தில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட கட்சியென்றும் நல்ல நோக்கத்துக்காக கட்சியை உருவாக்கிய என்னையே ஓய்வு பெறப்போகின்றேன் என அறிக்கையிட்டிருப்பதில் ஏதும் உள்நோக்கம் உள்ளதோ என யோசிக்கத் தோன்றுவதாகவும் தெரிவித்தார்.
கட்சி தற்போது பல முன்னேற்றகரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் வேலையற்றோருக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கான பல்வேறு செயற்பாடுகளும் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஓய்வுபெறும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அஹமட் புர்க்கான் தெரிவித்துள்ள கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் அழுத்தமாக தெரிவித்தார்.