நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், மது போதையில் நாயைக் கொன்று அதன் உடலுடன் உறவு கொண்ட சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சுபாஷ் சிங் என்ற 22 வயது இளைஞன். தன் நண்பர்களைக்காண ஹைதராபாத் வந்த சுபாஷ், அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளார். பின்னர் போதையில் சாஸ்திரிபுரம் நகரில் அலைந்து திரிந்த சுபாஷ், அங்கு முட்புதரில் திரிந்து கொண்டிருந்த கர்ப்பிணி நாயைப் பிடித்து தூக்கிலிட்டு கொலை செய்துள்ளார். அப்போதும் தனது வெறி தீராத சுபாஷ், அந்த நாயின் உடலுடன் உறவு கொண்டுள்ளார்.
நாயை தூக்கிலிட்ட போது, அது ஏற்படுத்திய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது நாயின் உடலை புதைக்க சுபாஷ் முயற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுபாஷை கட்டி வைத்து அடித்த மக்கள், உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சுபாஷைக் கைது செய்து, கொல்லப்பட்ட நாயின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது கொல்லப்பட்ட நாய் கர்ப்பமாக இருந்ததும், அதனுடன் சுபாஷ் உடலுறவு கொண்டதும் உறுதியானது. அதனைத் தொடர்ந்து சுபாஷ் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தின் போது வெறும் மது மட்டுமின்றி, சுபாஷ் போதை மாத்திரைகளையும் சாப்பிட்டதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.