புரவலர் புத்தகப் பூங்கா 37 வது வெளியீடான இராகலை தயானியின் ‘அக்கினியாய் வெளியே வா’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா 23.10.2016 ஞாயிறு அன்று காலை பத்து மணிக்கு இராகலை தமிழ் மகா வித்தியாலய பாரதி மண்டபத்தில் ஒய்வுநிலை உதவி கல்விப் பணிப்பாளர் திரு பீ.மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் இலக்கியப் புரவலர் ஹாஸிம்; ஒமர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்புரைகளை மேமன்கவி மற்றும் தமிழ்நாடு வளரி கவிதை இதழ் ஆசிரியர் திரு அருணாசுந்தரராசன் அவர்களும் நிகழ்த்த்தினார்கள்.
வாழ்த்துரைகளை ஆசிரியரும் கவிஞருமான இராகலை பன்னீர் அவர்களும், எழுத்தாளரும் விரிவுரையாளருமான மை.பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
வாழ்த்துரைகளை ஆசிரியரும் கவிஞருமான இராகலை பன்னீர் அவர்களும், எழுத்தாளரும் விரிவுரையாளருமான மை.பன்னீர்செல்வம் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.
ஏற்புரையை நூலாசிரியர் இராகலை தயானி நிகழ்த்த, நன்றியுரையை செல்வி என்.பிரியதர்க்ஷினி நிகழ்த்த, வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்வுகளை தொகுத்தளித்தார் கவிஞர் எம்.ஐ.எம்.நாளீர்.