மிக அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்து புதிய அதிர்ச்சித் தகவல்..!

மிக அதிகமாக தண்ணீர் குடித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்' என புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல உடல் நலத்துக்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்' என முந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் மிக அதிக அளவு தண்ணீர் குடிப்பது உயிருக்கு ஆபத்து. எனவே 'அளவோடு தண்ணீர் குடித்து வளமோடு வாழுங்கள்' என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

அவுஸ்திரேலியாவின்;மோனாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்அதில், அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது தேவைக்கு மிஞ்சிய நீரை மூளை தடுத்து நிறுத்துகிறது.

இதனால் அந்த தண்ணீரை மற்ற உடல் உறுப்புகள் மிக கடுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. தண்ணீரில் உள்ள சோடியத்தின் அளவு ரத்தத்தில் குறைந்து உடல் தனது நிலையை இழக்கச் செய்கிறது.இதனால் குமட்டல் மற்றும் நினைவிழக்க செய்தல் நிலை உருவாகி 'கோமா' நிலைக்கு செல்லும் ஆபத்தும் உருவாகிறது.

இதுவே உயிரை பறிக்க கூடிய சூழ்நிலையையும் ஏற்படுத்துகிறது.எனவே போதுமான அளவு மட்டும் தண்ணீர் குடித்து நிறைவாக வாழும்படி ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஹிரு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -