ஷபீக் ஹுசைன்-
அனைவருக்கும் சுத்தமான குடி நீர் வழங்கும் திட்டத்தின் கீழ் 3500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் செயற்படுத்தப்படும் மஹியங்கனை - ரிதீமாலியத்தை நீர்வழங்கல் கருத்திட்டம் மற்றும் அம்பாறை மாவட்டம் மஹா ஒயா நீர் வழங்கல் கருத்திட்டம் ஆகிய இரு திட்டங்களையும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று (19) திறந்துவைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.