காத்தான்குடி,மண்முனைப்பற்று பிரதேசங்களுக்கான அபிவிருத்திகளுக்கு அமைச்சர் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு..!

ஆதிப் அஹமட்-
கர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச்செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச்செயலாளருமான முபீனின் வேண்டுகோளின் பெயரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் காத்தான்குடி மற்றும் மண்முனைப்பற்று பிரதேசங்களுக்கான பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

காத்தான்குடி ஆற்றங்கரை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ரூபா ஒரு கோடியும்,நூறாணிய்யா மையவாடி சுற்று மதில் நிர்மானத்திற்கு ரூபா ஐம்பது இலட்சமும்,காத்தான்குடி பஸ் தரிப்பிட பொது மலசல கூடத்தினை அமைப்பதற்காக ரூபா இருபத்தி இரண்டு இலட்சமும்,விக்டரி விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு மற்றும் மைதான புணரமைப்பிற்கு ரூபா ஐம்பது இலட்சமும்,காங்கேனோடை ஆற்றங்கரை பூங்காவிற்கு ரூபா முப்பது இலட்சமும்,பாலாமுனை நடுத்துறை சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ரூபா முப்பது இலட்சமும்,ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கு கடற்கரை பூங்காவிற்கு ரூபா முப்பது இலட்சமும்,பாலமுனை நடுவோடை கடற்கரை கொங்க்ரீற்று வீதி மற்றும் வாகன தரிப்பிடம் அமைக்க ரூபா இருபத்தி இரண்டு இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இணைப்புச்செயலாளர் முபீனின் தொடர் முயற்சியின் பேரில் மேற்படி நிதி ஒதுக்கீடுகள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் மேற்பார்வையில் காத்தான்குடி நகர சபை மற்றும் மண்முனைப்பற்று பிரதேச சபை ஆகியன மேற்படி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -