எப்.முபாரக் -
திருகோணமலை புல்மோட்டை பிரதேசத்தின் கொக்கிளாய் ஆற்றில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற முறுகல் மற்றும் முறையற்ற சுற்றி வளைப்பு தொடர்பாக அப்பிரதேச கடற்றொழில் மீனவ சங்க தலைவர் சைபுத்தீன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம் .அன்வர் செயலாளர் எம்.பரீஸ் திருகோணமலை மாவட்ட மீனவ சம்மேளன சங்க தலைவர் அனிபா உட்பட பிரதேச மீனவர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை (22) கொக்கிளாய் முகத்துவாராம் பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது கொக்கிளாய்,மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் தற்போது மீன்பிடித்தலில் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் அதேபோன்று அப்பிரதேசங்களில் மீனவர் பயன்படுத்துகின்ற வளைகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும்,தோணிகள் இனந்தெரியாதோரால் எரிக்கப்படுவதாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இவ்விடயம் தொடர்பான கிழக்கு மாகாண மீன்பிடி அமைச்சரிடம் பேசி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் மீனவர்களிடம் தெரிவித்தார்.