அபு அலா, சப்னி அஹமட் -
கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (07) மத்திய சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கே.கருணாகரன், இரா.துரைரத்தினம், இந்திரகுமார் பிரசன்ன, எம்.என்.நடராஜா, வி.கிரிஷ்ணப்பிள்ளை உள்ளிட்ட குழுவினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் பாலித்த மஹிபால ஆகியோர்களுக்கிடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற மூன்று மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்ற பல அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. \