எம்.ஏ.எம்.முர்சித்-
நிந்தவூருக்கு திடீர் விஜயம் செய்த அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் ஜும்மாத் தொழுகையின் பின்னர் ஜூம்மா பள்ளி அலுவலகத்தில் மக்கள் மற்றும் ஊர் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார்.
இதன் போது ஒலுவில் துறைமுகத்தின் விளைவாக ஏற்பட்ட கடலரிப்பின் விளைவால் நிந்தவூர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நிந்தவூர் விவசாயிகளுக்கு சொந்தமான பல விவசாய நிலங்கள் கடலால் மூடப்பட்டுள்ளதுடன் மீன்பிடி கைத்தொழிலும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கு உரியதாகவுள்ளது. ஆனால் ஒலுவில் துறைமுகப் பாதிப்பிற்கான தீர்வு காணும் நடவடிகளில் நிந்தவூர் புறக்கணிக்கப் படுவதாக நிந்தவூர் மக்கள் விசனம் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ரிசாட் தொலைபேசி மூலம் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன். ஒலுவில் துறைமுகப் பிரச்சினை தொடர்பான அமைச்சர்கள் குழுவில் தானும் அங்கம் வகிப்பதால் உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக மக்களுக்கு உறுதி அளித்தார்.