பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு –காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரினால் காத்தான்குடி, பாலமுனை,பூநொச்சிமுனை பகுதியிலுள்ள சில பள்ளிவாயல்களுக்கும், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும் சுத்தமான நீரினை குளிராக்கும்,சூடாக்கும் இயந்திரங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
ஜம்இய்யது தாருல் பிர் நிறுவனத்தின் அனுசரனையுடன் வழங்கப்பட்டு வருகின்ற மேற்படி சுத்தமான நீரினை குளிராக்கும்,சூடாக்கும் இயந்திரங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று 24 திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதன் போது காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் செயலாளர் ஏ.எம்.எம்.மிஹ்ழாரினால் சுத்தமான நீரினை குளிராக்கும்,சூடாக்கும் இயந்திரங்கள் உரிய பள்ளிவாயல்களின் நிருவாகிகளுக்கும், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிக்கும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த இஸ்லாமிக் சென்றர் மேற்கொண்டு வருகின்ற சமூக சேவைப் பணிகளில் குழாய்க் கிணறுகள், அனாதைகள் பராமரிப்பு, வறிய மாணவர்களின் உயர்கல்வி புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொடுத்தல் என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.