அபு அலா-
விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசின் நிதியொதுக்கீட்டின் கீழ் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டுத் தொகுதிக்கான அங்குராப்பண நிகழ்வு நேற்றைய தினம் (09) கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன் உளளிட்ட அதிதிகளினால் இந்த ஆரம்ப வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.