தேசிய கொடியை திரிவுபடுத்தியதாக தெரிவித்து கைப்பற்றப்பட்ட கொடித் தொகையொன்று, அதன் உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த கொடிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் குறித்த கொடித் தொகை கொழும்பு சுதந்திர சதுக்கத்துக்கு அருகாமையில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
அதனை திரும்ப பெற்றுக்கொள்வதற்காக “சிங்ஹ லே” அமைப்பு உட்பட மேலும் சிலர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.
சர்சைக்குரிய கொடி தேசிய கொடியில் காணப்படும் மற்றும் செம்மஞ்சள் பச்சை நிறங்களில் காணப்படும் துண்டுகள் அகற்றப்பட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொடியை தேசிய கொடி அல்லாமல் “சிங்ஹ லே” கொடியாக பயன்படுத்துவது சட்டவிரோதமானது அல்ல என பொலிஸார் “சிங்ஹ லே” அமைப்புக்கு அறிவித்துள்ளது.
பொலிஸ் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு அமைய குறித்த கொடித் தொகை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.