சவூதி இளவரசருக்கு தலை துண்டித்து மரண தண்டனை வழங்கப் பட்டது .

வூதி அரேபிய இளவரசர் ஒருவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரியாத்தில் இடம்பெற்ற ஒரு கொலையில் குற்றம் சாட்டபட்டு குற்றம் நிருபனமான நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக , உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் எனப்படும் நபருக்கே கொலை குற்றம் சாட்டபட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுக்கப்பட்டபட்டியல் படி, சவூதியில் இந்த ஆண்டு மரண தண்டனை அளிக்கபட்ட 134வது நபர் இந்த இளவரசர் ஆவார்.

அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் மரண தண்டனையில் சிக்குவது அரிதாகும், 1977 ஆம் ஆண்டின் பின்னர் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் இன்று மரண தண்டனை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட இளவரசர் தனது நண்பரை சுட்டுக் கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார் எனவும் உள்துறை அமைச்சக அறிக்கை விடுத்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -