ஷபீக் ஹுஸைன்-
குருநாகல் மாவட்டம், ரன்தெனிகம குடி நீர் வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (21) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவின் வேண்டுகோளுக்கிணங்க நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சினூடாக அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டதினூடாக ரன்தெனிகல பிரதேசத்தில் 1623 பேர் பயனடையவுள்ளனர். இத்திட்டத்திற்கு 92.23 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.