ஒலுவில் அல் ஹிறா பவுன்டேஷன் ஏற்பாடு செய்த விசேட நிகழ்வு


சியான் எஸ் சம்சுடீன்-

ஒலுவில் அல் ஹிறா பவுன்டேஷன் ஏற்பாடு செய்த 2015ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களை கொளரவித்து சிறப்பிக்கும் நிகழ்வொன்று நேற்று 25 ஒலுவில் அல் ஹிறா பவுன்டேசன் அமைந்துள்ள இடத்தில் பவுன்டேசனின் தலைவரும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரியுமானAL .அலாவுதீன் (டாக்டர்) தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அல் ஹாஜ் MMM.நாஜிம் அவர்களும்,கொளரவ அதிதியாக அக்கரைப்பற்று பிரதி வலயக்கல்விப்பணிப்பாளர் AG.பஸ்மில் அவர்களும் சிறப்பு அதிதியாக ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய அதிபர் U.K அப்துர்ரஹீம் அவர்களும் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இதன்போது, ஒலுவில் அல் ஹிறா பவுன்டேஷனில் இருந்து மேலதிகமான நேரங்களில் கல்வி கற்று 2015 இல் உயர்தரப்பரீட்சை எழதி பல்கலைக்கழகம் நுழைந்த மாணவர்களுக்கு பரிசளித்து கொளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -