காரைதீவு நிருபர்-
காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியில் நேற்று சர்வதேச ஆசிரியர் தினவிழா அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக இலங்கைத்தமிழர் ஆசிரியர்சங்கத்தலைவரும் பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளருமான வி.ரி.சகாதேவராஜா சிறப்பதிதியாக பி.எஸ்.ஜ.இணைப்பாளரும் ஆசிரியஆலோசகருமான எம்.ரவீந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். சிங்களபாடஆசிரியை உஷா ராஜதீபன் பாராட்டப்பட்டார்.
முதலில் அதிதிகள் பாண்ட் வாத்தியம்சகிதம் வரவேற்கப்பட்டு பின்னர் விபுலானந்த அரங்கில் ஆசிரியர்தினவிழா மாணவரின் கலைநிகழ்ச்சிகளுடன் 3மணிநேரம் நடைபெற்றது.
சகல ஆசிரியர்களுக்கும் மாணவர் மாலைசூட்டி பாதநமஸ்காரம் செய்தனர்.
க.பொ.த.உயர்தர முதலாம் வருட மாணவர்கள் இந்நிகழ்வை ஏறுற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.