அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் போதுதான் ஜனநாயம் நிலைபெறும் - எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்

எப்.முபாரக்-
ந்த நாட்டில் ஜனநாயகம் நிலைபேற வேண்டுமாக இருந்தால் மாகாணசபை உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் நிலைபெறும் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய சுற்சூழல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று(21) காலை திருகோணமலையில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் ஜனாதிபதி மற்றும்பிரதமர் ஆகிய இருவரும் இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதில் மிகவும் நிதானத்துடன் செயற்பட்டு வருகின்றனர். அதற்கு எமது பங்களிப்பை வழங்க வேண்டும். ஜனாதிபதி அவர்களின் ஆட்சிக் காலத்துக்குள் நாட்டில் நிலையான ஜனநாயகத்தை ஜனாதிபதி ஏற்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி பதவி ஏற்ற பின்பு சுற்றாடலில் அதிக கவனம் செலுத்தி வருவதனை நாங்கள் எல்லோரும் அறிவோம். அவர் அவரது காலப்பகுதியில் பல்வேறு விடயங்களை செய்ய முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றார்.

இந்த நாட்டில் நாட்டின் பொருளாதாரம் நாட்டினுடைய கலாசாரம், ஒற்றுமை ஒருமைப்பாடு, நல்லிணக்கம் புரிந்துணர்வு வெவ்வேறு மக்கள் மத்தியில் நாட்டில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நாட்டின் சர்வாதிகாரத்தை இல்லாமல் செய்வது ஜனநாயகத்துக்கு உரிய இடத்தைக்கொடுப்பது போன்ற பல்வேறு கருமங்களில் அவரது அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் என்று கூறுகின்றபோது தனக்குள்ள அதிகாரங்களைத்தான் விட்டு விட்டு தான் செல்லத்தயாராக இருப்பதாகவும் அவர் தெள்ளத் தெளிவாக கூறுகின்றார்” என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -