எப்.முபாரக்-
தேசிய எச்.ஐ.வி/எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை ,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உள்ள வைத்தியசாலை பணிப்பாளர்கள், முப்படை உயரதிகாரிகள், சிறைச்சாலை, அரச சார்பற்ற நிறுவனங்களின் உயரதிகாரிகளை தெளிவுபடுத்தும் ஒன்று கூடல் இன்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (21) காலை 9.00மணியளவில் கிழக்கு மாகாண எச்.ஐ.வி எயிட்ஸ் இணைப்பாளர் சத்தியா ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
இதன் நாட்டில் எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகள் மற்றும் மாவட்ட ரீதியில் எயிட்ஸின் தாக்கம் போன்ற விடயங்கள் தரவுகளோடு தெளிவுபடுத்தப்பட்டதோடு கிழக்கு மாகாணத்தின் எச்.ஐ.வி எயிட்ஸ் விரிவாக்கல் குழுவொன்றும் இதன் போது தெரிவு செய்யப்பட்டது.