அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை.ஹொரவ்பொத்தானை பிரதான வீதியை மறைத்து வில்கம் விஹாரை பகுதியில் வசித்து வரும் 15 குடும்பங்களைச்சேர்ந்த பிரதேசமக்கள் தங்களுக்கு குடிப்பதற்கு சுத்தமான குடிநீரை பெற்றுத்தருமாறு கோரி இன்று (24) காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தினால் குடிநீர் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட 10 இலச்சம் ரூபாய் போதாமையினால் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதாகவும் கடந்த 21ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வில்கம் விஹாரை பகுதிக்கு வருகை தரும் வேளை குடிநீர் வழங்குவதாக ஜே.சி பியை வைத்துக்கொண்டு குழாய்கள் பொறுத்துதாக காண்பித்து மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக ஒரு குடும்பத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் வில்கம் விஹாரை கிராம உத்தியோகத்தர் பெற்றுக்கொண்டதாகவும் இதுவரைக்கும் எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் குற்றம் சுமத்துகின்றனர்.