ஆதிப் அஹமட்-
சமூக சேவையிலும் பொதுப்பணியிலும் ஆர்வமுள்ள இளைஞர்களை ஓரணியில் திரட்டி சிறப்பான வழிகாட்டலில் செயற்படும் இஸ்லாமிய இளைஞர் கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்தல் எனும் உண்ணத நோக்கில் நுஸ்ரத் யூத் பௌண்டேஷன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.இவ் அமைப்பின் முதலாவது இளைஞர் ஒன்றுகூடல் கடந்த 29/10/2016 சனிக்கிழமை இரவு காத்தான்குடி சலாக்கா பலஸில் நடைபெற்றது.சுமார் எண்பது இளைஞர்கள் அளவில் மேற்படி ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர். ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகளை நுஸ்ரத் யூத் பௌண்டேஷனின் ஸ்தாபகர் யு.எல்.எம்.என்.முபீன் மேற்கொண்டிருந்தார்.
நிகழ்வில் சிறப்பம்சமாக லஜ்னதுஸ்ஸுன்னாஹ் அந்நபவிய்யா மகளிர் அரபுக்கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.அன்சார் (மதனி) அவர்களினால் இஸ்லாத்தின் பார்வையில் பொதுப்பணியும் இளைஞர்களும் என்ற தலைப்பில் விசேட உரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் ஆண்மீக வழிகாட்டல், தொழில் வழிகாட்டல், தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக்கொள்ளல், பொதுப்பணியில் ஈடுபடல் மற்றும் ஊரின் முன்னேற்றத்துக்காய் உழைத்தல் உள்ளிட்ட பல பணிகளை மேற்படி அமைப்பினூடாக செயற்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.