பாறுக் ஷிஹான்-
புத்தளம் எருக்கலம்பிட்டி மு ம வித்தியாலய மைதானத்திற்கு திறந்த வெளியரங்கு அமைப்பதற்கான ஒழுங்குகள் நடைபெற உள்ளது. நாளை (9) ஞாயிற்றுக்கிழமை இத்திறந்த வெளியரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீ மு கா உயர்பீட உறுப்பினருமான எச்.எம்.றயீஸ் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் இணைந்து மேற்கொள்ளவுள்ளனர்.
இத் திறந்த வெளியரங்கு தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் றயீஸ் பிரதி விளையாட்டுத்துறை அமைச்சரும் ஶ்ரீ மு கா உப தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதி அமைச்சரின் 2மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் திறந்த வெளியரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அஸர் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.