உரிய மாவட்டங்களில் நியமனம் வழங்கப்படும் - கல்வி அமைச்சர் வாக்குறுதி

அபு அலா -

2013 / 2015 கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியான கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வெளி மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆசிரியர்களை உரிய மாவட்டங்களில் நியமிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கல்வி அமைச்சரிடம் முன்வைத்தார்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் இன்று (26) இடம்பெற்றது. இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் மற்றும் அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

அந்தவகையில், குறித்த ஆசிரியர்களை தத்தமது மாவட்டங்களில் நியமிக்கவேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் மிக விரிவாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோரினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரிடம் மிக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதன் பின்னர் குறித்த ஆசிரியர்களை உரிய மாவட்ட பாடசாலைகளில் நியமிப்பதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் வாக்குறுதியளித்தார்.

2013 / 2015 கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியான கிழக்கு மாகாண ஆசிரியர்கள் வெளி மாகாண பாடசாலைகளில் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் நியமிக்கவேண்டும் என்று முழு மூச்சாக நின்று செயற்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் ஹாபீஸ் நஸீர் அஹமட்டின் முயற்சியின் பின்னர் அதற்கான தீர்வும் எட்டப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -