தீபாவளி நாளில் மட்டக்களப்பில் நடந்த சோகம்..!

ட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மட்டக்களப்பு கொம்மாதுறை பிரதான வீதியின் அருகாமையிலுள்ள வீடு ஒன்றை உடைத்துக் கொண்டு லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியது.

கொழும்பில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லொறியின் டயர் வெடித்ததில் விபத்துக்குள்ளாகிய நிலையில் அருகில் இருந்த வீடு ஒன்றில் மோதியதில் வீடு முற்றாக இடிந்து சேதமடைந்துள்ளது.

குறித்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூன்று பேர் கட்டிட இடிபாடுகளுக்குள் அகப்பட்டதில் பெரும் சிரமத்தின் மத்தியில் மூன்று பேரையும் உயிருடன் மீட்டுள்ளனர்.

அதில் சிவகுமார் கவில்ராஜ் (வயது 23) கட்டிட இடிபாட்டுக்குள் அகப்பட்டதினால் காயம் ஏற்ப்பட்டதில் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவமானது இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த லொறியின் சாரதி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் எங்களால் பொலிஸ் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது, லொறியின் உரிமையாளர் குறித்த வீட்டை புனரமைத்து, சேதமடைந்த பொருட்களையும் பெற்றுத்தருவேன் என உறுதியளித்தால் மாத்திரமே லொறியை குறித்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு அனுமதிக்கப்படுமென பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -