யாழில் மீள் குடியேறும் முஸ்லீம்கள் எதிர் நோக்கும் குடிநீர் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்..!

பாறுக் ஷிஹான்-
யாழ் புதிய சோனகதெரு(பொம்மைவெளி) பகுதியில் மீள் மீள்குடியெறி வரும் முஸ்லீம் மக்கள் எதிர் நோக்கும் குடிநீர் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் தேசிய நீர் வழங்கல் அமைச்சரின் இனைப்பாளருமான ரொசான் தமீம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடல் நேற்றைய தினம்( 16) மஸ்ஜிதுல் அபூபக்கரில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் நீர் வழங்கல் அமைச்சின் பிரதி தவிசாளர் சபீக் ரஜாப்தீன் தலைமையில் நடைபெற்றதுடன் திட்டப்பணிப்பாளர் பாரதிதாசன் பொறியியலார்கள் தொழில்நுட்ப அலுவலர்கள் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது புதிய சோனகதெரு சாபிநகர் சூரியவெளி அடங்களாக அங்கு வசிக்கும் 750க்கும் மேற்ப்பட்ட அனைத்து குடும்பங்களுடைய குடிநீர் பற்றாக்குறை மிக விரைவில் தீர்க்கப்பட்டு தண்ணீர் வழங்குவது என இக்கலந்தரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் மக்கள் மீள்குடியேறும் பகுதிகளிற்கும் சபீக் ரஜாப்தீன் தலைமையிலான குழு சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -