ஆசிரியர் தின விழாவில் கணிதப்பாட ஆசிரிய ஆலோசகர் பரீட் ஆசிரியர் கௌரவிக்கப்பட்டார்..!

எம் எச் எம் அன்வர்-
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின விழாவில் 39 வருடங்கள் கணிதப்பாட ஆசிரியராகவும் ஆசிரிய ஆலோசகராகவும் செயற்பட்ட என் எம் எம் பரீட் ஆசிரியர் கௌரவிக்கப்ட்டார்.

வித்தியாலய அதிபர் ஏ ஜி எம் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே எல் எம் பரீட் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

12. 05. 1977 இல் கடமையினை பொறுப்பேற்று 2017 மார்ச் மாதமளவில் ஓய்வு பெறவுள்ள மேற்படி பரீட் சேர் அவர்கள் நீண்ட காலமாக காத்தான்குடி மீரா பாலிகா வித்தியாலயம் காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயம் மற்றும் இரத்தினபுரி எஹலியகொட பாடசாலையிலும் கணித பாடத்தில் பல மாணவர்கள் சித்திபெறுவதற்கும் பொறியியல் பீடத்திற்கு தெரிவாவதற்கும் பல பணிகளை புரிந்துள்ளது மாத்திரமன்றி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.

கல்வித்துறையை ஊக்குவிப்பதற்காக பல பணிகளை செய்து வருகின்ற பரீட் சேர்போன்ற அர்ப்பணிப்புள்ள பல ஆசிரியர்கள் எம்மத்தியில் பலர் உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -